Friday, March 7, 2008

அச்சம் இல்லை!



அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே
முழங்கி போன பாரதி இல்லை
அச்சம் போகவில்லையே

கத்தியின்றி ரத்தமின்றி
நடந்த யுத்தம் போனது
ஜாதி கொண்டு பேதம் கொண்டு
புதிய யுத்தம் நடக்குது

விந்தை எல்லாம் தீர்ந்தபின்னும்
வெளி மோகம் இன்னும் தீரல
விடியல் வந்த பின்னாலும்
மனித ஜென்மம் இன்னும் முழிக்கல

விடியல் வேண்டும் விடியல் வேண்டும்
இளைஞன் எல்லாம் விழிக்க வேண்டும்
மடியல் வேண்டும் மடியல் வேண்டும்
அச்சம் எல்லாம் மடியல் வேண்டும்
-------------------------------------
எவருக்கும் தலை வணங்குவதில்லை, தமிழை தவிற, என கத்துக்கொடுத்த பாரதியின் நினைவில், நான் பள்ளியில் எழுதிய என் முதல் கவிதை.
கதிர் கனல்.

Thursday, March 6, 2008

வணக்கம்

நிறைய பதிவுகளை படித்துள்ளேன். அதை எல்லாம் படிச்சு எனக்கும் எழுதனும்னு ஆசை வந்திடுச்சு. இந்த பதிவுக்கு வரும் அனைத்து பதிவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை பத்தி சொல்லிகின்றேன். என் பெயர் கதிரவன். நான் உங்களில் பலரை போல ஐ.டி. ல தாங்க இருக்கிறேன். சொந்த ஊரு தர்மபுரி பக்கம் ஒரு கிராமம். இப்போழுது வசிப்பது சென்னை மாநகரில். எனக்கு தமிழ் பிடிக்கும். தமிழ் தான் என் உயிர் மூச்சு என்று சொல்லும் அளவுக்கு.பாரதியார் பிடிக்கும். சென்னை தமிழ் கூட பிடிக்கும்.

நான் அதிகமாக பேச மாட்டேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேச வராது. ஆனால் எழுத வரும். என் நண்பர்கள் என்னை கனல் என்று கூப்பிடுவார்கள். நான் எழுதும் கவிதைகளை பார்த்து. கவிதை என்றதும், எனக்கு நம்ம ஸ்ரீ போலவோ, அல்லது சதீஷ் போலவோ, அல்லது நவீன் போலவோ, காதல் கவிதை வரும் என்று நினைக்காதீர்கள். இது வேறு மாதிரி.

மேலும் எழுதுவேன்..
கதிரவன்.
(முதல் முறை, பதிவிடுகின்றேன் என்பதாலும், தமிழில் இப்பொழுது தான் எழுத பழகுகின்றேன் என்பதாலும், பிழை இருந்தால் பொருத்துக்கொள்ளுங்கள்)