Thursday, March 6, 2008

வணக்கம்

நிறைய பதிவுகளை படித்துள்ளேன். அதை எல்லாம் படிச்சு எனக்கும் எழுதனும்னு ஆசை வந்திடுச்சு. இந்த பதிவுக்கு வரும் அனைத்து பதிவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னை பத்தி சொல்லிகின்றேன். என் பெயர் கதிரவன். நான் உங்களில் பலரை போல ஐ.டி. ல தாங்க இருக்கிறேன். சொந்த ஊரு தர்மபுரி பக்கம் ஒரு கிராமம். இப்போழுது வசிப்பது சென்னை மாநகரில். எனக்கு தமிழ் பிடிக்கும். தமிழ் தான் என் உயிர் மூச்சு என்று சொல்லும் அளவுக்கு.பாரதியார் பிடிக்கும். சென்னை தமிழ் கூட பிடிக்கும்.

நான் அதிகமாக பேச மாட்டேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேச வராது. ஆனால் எழுத வரும். என் நண்பர்கள் என்னை கனல் என்று கூப்பிடுவார்கள். நான் எழுதும் கவிதைகளை பார்த்து. கவிதை என்றதும், எனக்கு நம்ம ஸ்ரீ போலவோ, அல்லது சதீஷ் போலவோ, அல்லது நவீன் போலவோ, காதல் கவிதை வரும் என்று நினைக்காதீர்கள். இது வேறு மாதிரி.

மேலும் எழுதுவேன்..
கதிரவன்.
(முதல் முறை, பதிவிடுகின்றேன் என்பதாலும், தமிழில் இப்பொழுது தான் எழுத பழகுகின்றேன் என்பதாலும், பிழை இருந்தால் பொருத்துக்கொள்ளுங்கள்)

9 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

உங்களை பதிவுலகிற்கு புன்னகைகளுடன் வரவேற்கிறேன் நண்பர் கதிரவனே :)))

//நான் அதிகமாக பேச மாட்டேன்//

அப்படியென்றால் கண்டிப்பாக அதிகம் எழுத்துவீர்கள் :) ஜாலியா எழுதுங்க எல்லோரும் சேர்ந்து இரசிக்காலாம்!

வாழ்த்துக்கள் கணல்!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//கவிதை என்றதும், எனக்கு நம்ம ஸ்ரீ போலவோ, அல்லது சதீஷ் போலவோ, அல்லது நவீன் போலவோ, காதல் கவிதை வரும் என்று நினைக்காதீர்கள். இது வேறு மாதிரி.//

என்னை காதல் கவிதை எழுதுபவன் என்று முத்திரை குத்திவிட்டீர்களா!!! காதலும் என் கவிதைகளில் உண்டு :)

என்னை நவீனுடனும், ஸ்ரீயுடனும் சேர்த்து சொன்னீர்கள், அதுக்கு ஒரு பெரிய நன்றி :)))

வேறு மாதிரி கவிதைகளா!! ஆர்வம் அதிகரிக்கிறதே :))

கதிர் said...

@சதீஷ்
//அப்படியென்றால் கண்டிப்பாக அதிகம் எழுத்துவீர்கள் :) ஜாலியா எழுதுங்க எல்லோரும் சேர்ந்து இரசிக்காலாம்!

வாழ்த்துக்கள் கணல்!!//

முதல் பின்னூட்டம் போட்டதற்கு நன்றி சதீஷ்.

//என்னை நவீனுடனும், ஸ்ரீயுடனும் சேர்த்து சொன்னீர்கள், அதுக்கு ஒரு பெரிய நன்றி :)))

வேறு மாதிரி கவிதைகளா!! ஆர்வம் அதிகரிக்கிறதே :))//

அடுத்த பதிவில் என் கவிதைகளில் ஒன்றை நிச்சயம் பதிக்கின்றேன்.

கதிர்.

Aruna said...

வாங்க கதிர்...பதிவுலகுக்கு வரவேற்கிறேன்!!!.உங்கள் எண்ணங்களைப் படிக்கும் போது உங்களுக்கு இங்கே நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று மட்டும் புரிகிறது...இருந்தாலும் பயமுறுத்தவில்லை...வாழ்த்துக்கள்!
அன்புடன் அருணா

தினேஷ் said...

கதிரவன்,

தங்களின் உண்மையான சுயஅறிமுகம் முலம் தங்களை அறிந்துகொண்டேன். வலைப்பதிவு நண்பர்களுடன் நானும் தங்களை வரவேற்கிறேன்... நேரம் இருக்கும் போது கண்டிப்பாக தங்கள் வலைப்பதிவுக்கு வந்து படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

ஸ்ரீ said...

வணக்கம் சகோதரா,

கொஞ்சம் சுவாரசியமாகத்தான் தெரிகிறீர் கனல். தமிழ் மீதுள்ள அர்வத்துக்கு தனி வணக்கம். என்னை போல அதிகம் பேசாதவர் போலும். ஆங்கிலம் வெறும் மொழி தானே அது தெரியவேண்டிய அவசியமும், கட்டாயமும் நிச்சயம் இல்லை. வேறு மாதிரியான கவிதைகள் தரப்போவதாக சொன்னதுக்கு நன்றி. (காதலை பத்தி நீங்களும் எழுதினா போட்டி அதிகம் வந்துடுமே ;) ).

காதல் ஒரு பாகம் தான் அதை தவிர்த்துள்ள நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறேன் உங்களுடம். என்னை தாங்கிய சில நல்ல நண்பர்களால் தான் நானும் பிழை இல்லாமல் (பிழைகள் அதிகம் இப்போது இல்லை என நினைக்கிறேன்) எழுதப்பழகிக்கொண்டேன்.

மேலும் என்னை தெரிந்தவர்கள் வெகு சிலரே :). வலை உலகுக்கு வரவேற்கின்றேன்.

நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்.
ஸ்ரீ.

கதிர் said...

@aruna
//உங்களுக்கு இங்கே நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று மட்டும் புரிகிறது...இருந்தாலும் பயமுறுத்தவில்லை...வாழ்த்துக்கள்!
அன்புடன் அருணா//

அதிர்ச்சிகள் இல்லாத வாழ்க்கை நன்றாகவா இருக்கும் :) உலகை முதலில் தொட்ட நொடியில் இருந்து அதிர்ச்சிகள் தானே காத்திருக்கின்றது எல்லாருக்கும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி

கதிர்.

கதிர் said...

@தினேஷ்
//தங்களின் உண்மையான சுயஅறிமுகம் முலம் தங்களை அறிந்துகொண்டேன். வலைப்பதிவு நண்பர்களுடன் நானும் தங்களை வரவேற்கிறேன்... நேரம் இருக்கும் போது கண்டிப்பாக தங்கள் வலைப்பதிவுக்கு வந்து படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்...//

நன்றி தோழரே. நிச்சயம் வாருங்கள்.

கதிர்.

கதிர் said...

@ஸ்ரீ
//காதல் ஒரு பாகம் தான் அதை தவிர்த்துள்ள நிறைய விஷயங்களை எதிர்பார்க்கிறேன் உங்களுடம்//

ஆம். காதலுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், எனக்கு காதல் கவிதைகள் எழுத தெரியாது என்பது தான் உண்மை.

நிச்சயம் வேறு விஷயங்கள் பல எழுதுவேன். வருகைக்கு நன்றி தோழா.

கதிர்.