Friday, March 7, 2008

அச்சம் இல்லை!



அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் என்பது இல்லையே
முழங்கி போன பாரதி இல்லை
அச்சம் போகவில்லையே

கத்தியின்றி ரத்தமின்றி
நடந்த யுத்தம் போனது
ஜாதி கொண்டு பேதம் கொண்டு
புதிய யுத்தம் நடக்குது

விந்தை எல்லாம் தீர்ந்தபின்னும்
வெளி மோகம் இன்னும் தீரல
விடியல் வந்த பின்னாலும்
மனித ஜென்மம் இன்னும் முழிக்கல

விடியல் வேண்டும் விடியல் வேண்டும்
இளைஞன் எல்லாம் விழிக்க வேண்டும்
மடியல் வேண்டும் மடியல் வேண்டும்
அச்சம் எல்லாம் மடியல் வேண்டும்
-------------------------------------
எவருக்கும் தலை வணங்குவதில்லை, தமிழை தவிற, என கத்துக்கொடுத்த பாரதியின் நினைவில், நான் பள்ளியில் எழுதிய என் முதல் கவிதை.
கதிர் கனல்.

3 comments:

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

கணல் பெயர்காரணம் புரிகிறது :) எழுத்துக்கள் தெரிக்கிறது கதிர்!!

சுடும் வரிகள்! வேரென்ன சொல்ல :)

ஸ்ரீ said...

பள்ளியில் எழுதிய கவிதையா? :O. அப்போ சீனியர் கவிஞரா? வீரியம் வரிகளில் தெரிகின்றது. வாழ்த்துக்கள்.

மே. இசக்கிமுத்து said...

பாரதியை பற்றிய முதல் கவிதை அருமை!!